275. மானிடருடைய ஜீவன் பூமியில்

1. மானிடருடைய ஜீவன்
பூமியில் உரத்த
காற்றினால் அடிக்கப்பட்ட
ஓர் புகைக்கும் மேகத்துக்கும்.
அல்லவோ ஒப்பாயிருக்கும்.

2. மானிடருடைய நாட்கள்
சீக்கிரம் கழியும்,
ஆறுகளைப் போல் வடியும்
வேகத்தோடுந் துருசோடும்
ஓடும் ஓட்டம் போலே ஓடும்.

3. மானிடர் மகிழ்ச்சிக்குள்ள
மாறுதல்கள் மிச்சம்;
ராப்பகல், இருள் வெளிச்சம்
மாறும் போல் சந்தோஷத்துக்கும்
வெகு மாறுதல் இருக்கும்

4. மானிடருடைய ரூபம்
பூவைப் போல் விளங்கும்,
பூவைப் போலவும் வதங்கும்;
இதைப்போல் அதுவும் வாடும்
இவ்விரண்டின்வர்ணம் மாறும்.

5. மானிடர் பலத்தை பார்த்தால்
பெரிதாகக் காணும்.
வெகு பலசாலிதானும்
கொஞ்ச நாள் ஜெயஞ் சிறப்பான்,
கொஞ்ச நோய் வந்தால் கிடப்பான்

6. மானிடரின் வாழ்வு என்ன
நிச்சயங் கொடுக்கும்;
உருளையைப்போல் இருக்கும்,
கீழிருந்தது மேலாகும்,
மேலிருந்தது கீழாகும்.

7. மானிடரின் லோக மேன்மைச்
சீக்கிரம் அடங்கும்.
இங்கே யாவரும் வணங்கும்
ராசர்க்கும் இறப்போருக்கும்
ஏக முடிவு இருக்கும்.

8. மானிடருடைய கல்வி
எத்தனை யானாலும்,
எத்தனை அவன் கற்றாலும்,
பேதைக்குச் சரியாய்சி‌ச்‌ சாவான்
இவனைப்போல் மண்ணுமாவான்.

9. மானிடர் லௌகீக ஞானம்
நுண்மையே யானாலும்,
மா புகழ்ச்சியைப்பேற்றாலும்,
ஞானி மரணமடையும்
நேரத்தில் எல்லாம் கலையும்.

10. மானிடருடைய ஆஸ்தி
வெள்ளச் சேதத்துக்கும்
பல விக்கினங்களுக்கும்
அல்லவோ நேராயிருந்து,
அசுப்பில் போவதுண்டு

11. மானிடர் துரைத்தனங்கள்
வெகுவாக மாறும்,
அரசாண்டவரில் யாரும்
ஆசனங்கள் மேல் இரார்கள்,
ஒரு நாள் இறங்குவார்கள்.

12. மானிடரது சிறப்புக்
கொஞ்ச நாள் மினுங்கும்,
அதைப் பூச்சிகள் கெடுக்கும்.
சம்ப்ரமங்களை இச்சிக்கும்
பெருமையைச் சாவழிக்கும்.

13. மானிடருக்குள்ள யாவும்
ஓட்டமாகப் பாயும்,
யாவும் அழிவுக்குச் சாயும்;
தெய்வ பக்தியே கெலிக்கும்
நல்லோர் வாழ்வென்றைக்கும் நிற்கும்.

Mich, Franck, † 1667