276. நாள் போகுமே, போகட்டுமேன்

1. நாள் போகுமே, போகட்டுமேன்
அநித்தியத்தை நான் நாடேன்;
நான் பற்றிக் கொள்ளும் நித்திய
பொருள் என் பரம பிதா.

2. என் ஆவிக்கென் நெருக்கமும்
என் நோவும் பாரமாகியும்,
பரகதியின் நினைவு
மா ஆறுதல் தருவது.

3. இக்கட்டால் என் மனத்திலே
வியாகுலம் உண்டாகவே,
அதென்னை மோட்ச ஊருக்கு
நேரே நடத்துகின்றது.

4. இழவுக்குக் கோவில் மணி
அடிபடுகிற தொனி
என் ஆவிக்கின்பம், எனக்கே
பரத்தை நினைப்பூட்டுமே

5. ஓர்நேசன் சென்று போகையில்
நான் துக்கப்பட்டும் மோட்சத்தில்
நானும் இனி ப்ரவேசிப்பேன்
என்றென்னை ஆற்றித் தேற்றுவேன்.

6. சவங்கள் குழிகளிலே
இக்கட்டும் நோவுமின்றியே
கிடக்கும், நானும் அப்படி
கிடந்து தூங்குவேன் இனி.

7. எத்துன்பத்துக்கும் நீங்கலாய்
என் ஆவி இயேசு வசமாய்
இருக்கும், என் எலும்புக்கும்
புது உயிர் தரப்படும்.

8. என் சாவில்தான் என் செல்வமும்
அளவில்லா மகிழ்ச்சியும்
துவங்குமே, புவியை நான்
விடும்போதே நான் மோட்சவான்,

9. அப்போ பிரிந்த ஆத்துமம்
நாற்றூதராலே பாக்கியம்
நிறைந்த பரதீசுக்கே
சுமக்கப்பட்டுப் போகுமே.

10. அத்தால் நல்மாறுதல் உண்டே
என் ஆவிக்கந்தச் சணமே
கர்த்தாவைப் பார்க்கும் மேன்மைக்கு
வழி திறந்து விட்டது.

11. அவர்க்கும் ஆட்டுக்குட்டிக்கும்
எல்லா வணக்கத்தோடேயும்
அங்கே ஏராள வானவர்
துதி செலுத்தி நிற்பவர்.

12. என் ஆவியில் அப்பரம
தோத்திரத்தையே கேட்கிற
நான் இந்த லோகத்தை இனி
இச்சித்துக் கொள்வதெப்படி.

13. என் மீட்பரை என் ஆவியால்
நான் பற்றிக்கொண்டபடியால்
இப்பூமியின் நலம் பொலம்
எல்லாம் பின்னான காரியம்.

14. அங்கே சேர்ந்தோரின் பாக்கியம்
மா உறுதி, மா பத்திரம்.
பரத்தின் நன்மைஎன்றைக்கும்
இருக்கும் இன்பத்தைத் தரும்.

15. மோட்சானந்தத்தின் ஒளியே
அங்கே வந்தேறினோனுக்கே
மா ஆச்சரிய அழகும்
சிறப்புமாயப் ப்ரகாசிக்கும்.

16. ஆதிமுதல் பரகதி
அடைந்தவர்களோடினி
நான் அங்கே வாழ்வதெனக்கு
மா இன்பம் அளிக்கிறது.

17. வெண் வஸ்திரச் சிங்காரத்தைத்
தரித்த மோட்சவான்களை
நான் சேர்ந்து, அவர்களுடன்
சஞ்சாரம் பன்னப்பெற்றவன்.

18. நான் தீர்க்கதரிசிகளும்
மகாத்துமாக்கள் யாவரும்
பெரிய மகிமையுடன்
இருக்கும் வாழ்வைப் பார்ப்பவன்

19. நானும் அவர்களோடினி
தேவாட்டுக்குட்டிக்குத் துதி
செலுத்தப்போவேன் எனக்கும்
அப்பாக்கியம் அகப்படும்.

20. இச்சிக்கப்பட்ட ஜீவனே,
என் ஆவி நாடுஞ் செல்வமே,
உன்னாலெப்போ நான் பூரிப்பேன்,
எப்போ நான் அங்கே சேருவேன்.

G. Arnold † 1714.