277. என் காரியங் கார்தாவுக்கு

1. என் காரியங் கார்தாவுக்கு
ஒப்புக் கொடுக்கப்பட்டது;
பிழைஎன்றாள், அவர்க்கென்றே
பிழைப்பேன்;
அழைத்தால், அங்கேசேர்ப்பாரே.

2. என் பாவத்தால் பயம் வந்தால்
என் இயேசு என்னை மீட்டதால்
அதற்கு நீங்கலாவேனே;
இவர் தாமே
என் பாவத்தைச் சுமந்தாரே.

3. என் மீட்புக்காக ரட்சகர்
பலியாய்ச் சாவடைந்தவர்,
திரும்ப வெற்றியுடனே
நான் வாழவே
என் நீதிக்கென்றெழுந்தாரே.  

4. நான் உயிரோடிருந்த நாள்
அவருடைய வேலையாள்
ஆகையால் நான் பாக்கியன்,
அவருடன்
நான் செய்த பின்பும் வாழ்பவன்.

5. நான் அவர் வரும் நாளிலே
இக்கட்டும் நோவுமின்றியே
எழுந்திருப்பேன்  என்பது
இங்கெனக்கு
என் நோவை ஆற்றுகின்றது.

6. கர்த்தாவை முக முகமாய்
முடிவில்லா மகிழ்ச்சியாய்
இனி நான் தரிசிக்கிற
வானலோகக்
கதியுண்டாம், அல்லேலூயா.

7. ஆ, இயேசு, தேவமைந்தனே,
நீர் என்னை மீட்டுக்கொண்டீரே,
நீரே நான் பற்றிக் கொள்பவர்,
நீர் ஒருவர்
என் ஆறுதல், என் ரட்சகர்.

8. கர்த்தாவே நாங்கள் நித்திய
மோட்சானந்தத்திலே வர,
நீர் எனக்கும், என்னோடேயும்
எல்லாருக்கும்
நல் மரணத்தை யருளும்.

Joh.Icen, † 1597.