1. நான் காலம் பண்ணும் நேரத்தில்
அடியேனை நீர் காரும்.
என் இயேசுவே, நான்போகையில்
நீரே துணையாய் வாரும்
என் ஆவியை என் முடிவில்
நீர் உம்முடைய கைகளில்
அன்பாக ஏந்திக்கொள்ளும்.
2. என் பாவங்களின் பாரத்தால்
என் மணமென்னைக் குத்தி
வியாகுலப்படுத்தினால்,
நீரே கடன் செலுத்தி
அடைந்த மரணத்தையே
நினைத்துக் கொள்வேன், இயேசுவே
அத்தால் மன்னிப்புண்டாம்.
3. நான் உமது அவயவம்
என்றென்மனம் களிக்கும்,
அவஸ்தைக்குள்ளும் உம்மிடம்
என் ஆத்துமம் தரிக்கும்,
நான் செத்தும் சாகேன்; ஏனென்றால்
நீர் எனக்காக மாண்டதால்
அனந்த வாழ்வடைவேன்.
4. உயிர்த்தெழுந்தீர், ஆகையால்
குழியில் நான் தரியேன்
பரத்துக்கேறினீர் அத்தால்,
சந்தோஷமாய் அடியேன்
என் கண்ணை மூடலாம் அல்லோ,
நீர் எங்கே ஏறிப்போனீரோ
அங்கென்னையும் நீர்சேர்ப்பீர்.
5. என் ஆத்துமத்தை இயேசுவின்
கரத்தில் ஒப்புவிப்பேன்,
நான் நித்திரை அடைந்தபின்
திரும்பவும் விழிப்பேன்,
என் மீட்பரானவர் அன்றே
வந்தென்னை மகிமையிலே
அழைத்துக்கொண்டுபோவார்.
Nikolaus Hermann † 1561.