1. போவேன், துன்மார்க்கமான
பொல்லாத லோகமே,
என் ஆத்துமத்திற்கான
தாவாயிருக்காயே;
என் வாஞ்சை மோட்சத்துக்கு
நேராகுமங்கே தான்
சன்மார்க்கன் இயேசுவுக்கு
முன்பாக வாழுவேன்.
2. என் காரியங்களுக்குத்
துணை நீர், இயேசுவே,
அடியேன் ரோகத்துக்கு
நீர் பரிகாரியே
என் நோவை ஆற்றி வந்து,
திடனை அருளும்;
நல் மரணத்தைத் தந்து.
அன்பாக ரட்சியும்
3. என் நெஞ்சில் உம்முடைய
திவ்விய நாமமே
திகில் எல்லாம் மறைய
விளங்கும், இயேசுவே.
அவஸ்தையில் நீர் கிட்ட
இருந்தெந்நேரமும்
நீர் எனக்காய் மரித்த
ரூபாகக் காண்பியும்.
4. என் ஆவியை அன்பாக
எல்லா விபத்துக்கும்
விலக்கி, தயவாகக்
கையேந்தியருளும்
இவ்விதமாய் இறந்தோன்
இக்கட்டைத் தாண்டினான்,
பரகதிக்கு வந்தோன்
பிழைத்திருக்கிறான்.
5. ஆ, ஜீவ புஸ்தகத்தில்
என் பேரை எழுதும்,
உம்மண்டை நான் பரத்தில்
எல்லா வாழ்வோடேயும்
இருக்கும் கூட்டத்தோடே
இனி சேரட்டுமேன்,
அங்கும்மை நல்லோரோடே
இனி சேரட்டுமேன்,
நான் என்றும் போற்றுவேன்.
Valerius Herberger, † 1627