1. வெகு பேருக்கின்பமான
லோகமே நீ எனக்குத்
திகிலுங் கசப்புமான
பரதேசமானது.
மண்ணை ஆசையாகப் பற்றும்
லோகத்தார் அத்தால் வாழட்டும்
தேவரின் பேரிலே
வாஞ்சையான, இயேசுவே.
2. வெயிலில் வருத்தமான
வேலை செய்துழைக்கிற
கூலிக்காரர் சுகமான
தூக்கத்தால் திடப்பட
எப்போ பொழுது புகுந்து
போகுமென்று காப்பதுண்டு.
இயேசுவே, நான் உம்மண்டை
வந்து சேர்வதே மேன்மை.
3. நீர் தரிசனை கொடுத்து
என்னைச் சேர்க்கும் நன்மைக்காய்
நான் அனைத்தையும் வெறுத்து
லோக வாழ்வைக் குப்பையாய்
எண்ணுவேனே, நீர் நான் தேடும்
ஆஸ்தியும் கதியும் பேறும்;
இயேசுவே நான் உம்முடன்
சேர்ந்திருந்தால் பாக்கியன்.
4. தங்கள் வர்த்தகத்துக்காக
வேறே பேர்கள் கப்பலில்
ஏறி, நாச மோசமாக
தூரமாய்க் கடல்களில்
யாத்திரைகளைப் பண்ணட்டும்,
நான் உம்மிடம் சேருமட்டும்
ஓடுவேன், என் இயேசுவே,
5. இந்த என் சரீரமான
மண்ணை மண் படுக்கைக்குக்
கொண்டு போய்ப் புதைப்பதான
காலம்வந்தால் நல்லது;
பாடுகளெல்லாம் முடிந்த
அந்த நாளிலே பிரிந்த
ஆவி உம்மண்டையிலே
தங்கப்போமே, இயேசுவே.
6. வா, வா, நித்திரையின் தோழா;
சாவே, என்னைக் கொண்டுபோ;
நான் குடாக்கடலில் ஓட
கப்பலைத் திருப்பாயோ,
லோகத்தாரின் திகிலானாய்
எனக்கோ சந்தோஷமானாய்;
உன்னால் இயேசுவண்டைக்குச்
சேருதல் எனக்குண்டு,
7. ஆ, நான் காவல்வீடாம் இந்த
அங்கத்தை இந்நேரமே
விட்டுச் செல்வங்கள் பொழிந்த
பரமண்டலத்தில்
சேர்ந்து, பரிசுத்தமுள்ள
மோட்சவான்களோடன்புள்ள
இயேசுவான உம்மையே
போற்ற ஆசையாவேனே.
8. இன்றும் பரதேசியாக
அடியேன் இப்பள்ளத்தில்
அக்கதிக்குத் தூரமாக
பாடுபட்டுத் தங்கையில்
இதற்குள்ளே நான் நாள்தோறும்
சிந்தையோடும் வாஞ்சையோடும்
தேவரீரண்டையிலே
சேர்ந்திருப்பேன், இயேசுவே.
J.Franck † 1677