1. நான் திவ்விய செட்டைகளால் நித்தமே
மறைக்கப்படோய்ந்து வசிப்பதெங்கே,
ஓர் பாவமும் ஆவியை என்றும் தீண்டா
அடைக்கலம் உலகிலே இல்லையே,
இல்லை, இல்லை, இங்கில்லையே,
அதுயர நித்ய ஒளியில் தானே.
2. நான் இனி இவ்வுலகில் தங்குவானேன்,
சிறந்த சுதேசத்துக் கேங்குகிறேன்.
மேலான எருசலேம் என் ஆத்துமா
என்றைக்கும் சுகிக்கும் இருப்பிடமா
ஆமாம், ஆமாம் அவ்விடமே
என் ஆத்துமம் ஓய்ந்து வசிக்கலாமே
3. ஆ, இயேசு வோடோய்வது பாக்கியமே;
என், பாவமும் சாவும் சேராத அங்கே;
என் ஆவி களிக்க வானோரின் வீணை
சங்கீர்த்தனம் கேட்பேன்; என்மீட்பரண்டை
ஓய்வை, ஓய்வை வாஞ்சிக்கிறேன்.
என் மீட்பரின் மடியில் என்றும் ஓய்வேன்.