296. மென்மேலும் உம்மண்டை

1. மென்மேலும் உம்மண்டை
என்னை இழும்
சிலுவை வழியாய்ச்
சேர்த்துக்கொண்டும்,
என்தன் அவா ஒன்றே,
உம்மண்டை, தேவனே,
உம்மண்டை, தேவனே,
சேருவதே.

2. தாசன் யாக்கோப்பை
ராக் காலத்தில்
திக்கற்றுக் கள்மேல் நான் போல்,
தூங்குகையில்
என் தன் கனாவிலே
உம்மண்டை, தேவனே,
உம்மண்டை, தேவனே,
சேருவேனே.

3. நீரே நடத்திடும்
பாதை எல்லாம்
விண் எட்டும் ஏணிபோல்
விளங்குமாம்;
தூதர் அழைப்பாரே,
உம்மண்டை, தேவனே,
உம்மண்டை, தேவனே,
சேருவேனே.

4. நான் விழித்தும்மையே
தோத்திரிப்பேன்
என் துயர்க் கல்லை உம்
வீடாக்குவேன்;
என் துன்பத்தாலுமே
உம்மண்டை, தேவனே,
உம்மண்டை, தேவனே,
சேருவேனே.

Sara Adams, † 1841.