1. எந்தன் ஜீவன், இயேசுவே,
சொந்தமாக ஆளுமே.
என் தன் கால நேரமும்
நீர் கையாண்டே அருளும்,
2. எந்தன் கை பேரன்பினால்
எவப்பாடவும், என் கால்
வேகமாய் உழைக்கவும்,
அழகாய் விளங்காவும்.
3. எந்தன் நாவு இன்பமாய்
உம்மைப் பாடவும், என்வாய்
மீட்பின் செய்தி கூறவும்
ஏதுவாக்கியருளும்.
4. எந்தன் ஆஸ்தி தேவரீர்
முற்றும் ஏற்றுக்கொள்ளுவீர்,
பக்தி கல்வி யாவையும்
சித்தம் போல் ப்ரயோகியும்.
5. எந்தன் சித்தம் இயேசுவே
ஒப்புவித்து விட்டேனே:
எந்தன் நெஞ்சில் திங்குவீர்,
அதை நித்தம் ஆளுவீர்.
6. திருப்பாதம் பற்றினேன்,
எந்தன் நேசம் ஊற்றினேன்;
என்னையே சமூலமாய்த்
தத்தம் செய்தேன் உமக்காய்.
Frances Havergal. † 1878.