1. யுத்தம் செய்வோம், வாரும்,
கிறிஸ்து வீரரே!
இயேசு சேனைக் கர்த்தர்
பின்னே செல்வோமே.
வெற்றி வேந்தராக
முன்னே போகிறார்,
ஜெயக் கொடி ஏற்றி,
போர் நடத்துவார்,
யுத்தம் செய்வோம் வாரும்,
கிறிஸ்து வீரரே
இயேசு சேனைக், கர்த்தர்
பின்னே செல்வோமே!
2. கிறிஸ்து வீரரே, நீர்
வெல்ல முயலும்;
பின்னிடாமல் நின்று
ஆரவாரியும்!
சாத்தான் கூட்டம் அந்தத்
தொனிக் கதிரும்,
நரகாஸ்திபாரம்
அஞ்சி ஆசியும்!
யுத்தம் செய்வோம் வாரும்,
கிறிஸ்து வீரரே
இயேசு சேனைக், கர்த்தர்
பின்னே செல்வோமே!
3. கிறிஸ்து சபை வல்ல
சேனை போன்றதாம்;
கர்த்தர் சென்ற பாதை
செல்கிறோமே நாம்
கிறிஸ்து தாசர் யாரும்.
ஓர் சரீரமே;
விசுவாசம், அன்பு,
நம்பிக்கை ஒன்றே,
யுத்தம் செய்வோம் வாரும்,
கிறிஸ்து வீரரே
இயேசு சேனைக், கர்த்தர்
பின்னே செல்வோமே!
4. க்ரீடம், ராஜமேன்மை
யாவும் சிதையும்,
கிறிஸ்து சபைதானே
நிற்கும் நித்யமும்
" நரகத்தின் வாசல்
ஜெயம் கொள்ளாதே, "
என்ற திவ்விய வாக்கு
வீணாய்ப் போகாதே,
யுத்தம் செய்வோம் வாரும்,
கிறிஸ்து வீரரே
இயேசு சேனைக், கர்த்தர்
பின்னே செல்வோமே!
5. பக்தரே, ஒன்றாகக்
கூட்டங் கூடுமென்,
எங்களோடு சேர்ந்து
ஆர்ப்பரியுமேன்,
விண்ணோர் மண்ணோர் கூட்டம்
இயேசு ராயர்க்கே
கீர்த்தி, புகழ் மேன்மை
என்றும் பாடுமே,
யுத்தம் செய்வோம் வாரும்,
கிறிஸ்து வீரரே
இயேசு சேனைக், கர்த்தர்
பின்னே செல்வோமே!
Baring Gould, † 1865.