303. களிகூரு, சீயோனே

1. களிகூரு, சீயோனே,
ஓ மகிழ், எருசலேம்!
சமாதான கர்த்தராம்
உன் ராசா வருகிறார்.
களிகூரு சீயோனே,
ஓ மகிழ், எருசலேம்!

2. ஓசியன்னா, தாவீதின்
மைந்தனே, நீர் வாழ்கவே!
உம்முடைய நித்திய
ராச்சியத்தை ஸ்தாபியும்,
ஓசியன்னா, தாவீதின்
மைந்தனே, நீர் வாழ்கவே!

3. ஓசியன்னா, ராசாவே,
வாழ்க, தேவ மைந்தனே!
சாந்தமுள்ள உமது
செங்கோல் என்றும் ஆளவும்
ஓசியன்னா, ராசாவே,
வாழ்க, தேவ மைந்தனே!

Composed around 1820
J.J.Escherburg