304. இம்மானுவேலே வாரும், வாருமே

1. இம்மானுவேலே வாரும், வாருமே:
மெய் இஸ்ரவேலைச் சிறை மீளுமே;
மாதெய்வமைந்தன் தோன்றும் வரைக்கும்
உன்ஜனம் பாரில் ஏங்கித் தவிக்கும்.
மகிழ்! மகிழ்! சீயோனின் சபையே.
இம்மானுவேலின் நாள் சமீபமே.

2. மா வல்ல ஆண்டவா, வந்தருளும்;
முற்காலம் சீனாய் மலைமீதிலும்
எக்காளம்  மின்னலோடு தேவரீர்
ப்ரமாணம் இஸ்றவேலுக்களித்தீர்.

3. ஈசாயின் வேர்த் துளிரே, வாருமே,
பிசாசின் வல்ல கோஷ்டம் நீக்குமே
பாதாள ஆழம் நின்று ரட்சியும்,
வெம் சாவின் மேலும் வெற்றி அளியும்.

4. அருணோதயமே, ஆ, வாருமே,
வந்தெங்கல் நெஞ்சை ஆற்றித் தேற்றுமே;
மந்தார ராவின் மேகம் நீக்கிடும்.
இருண்ட சாவின் மேலும் வெற்றி அளியும்.

5. தாவீதின் திறவுகோல் வாருமே,
விண் வாசலைத் திறந்து தாருமே;
ஒடுக்கமாம் நல் வழி கத்திடும்;
விசாலமாம் துர்ப்பாதை தூர்த்திடும்.

Based on the ancient Advent Antipons