305. ஓ மா சுத்த கதியுற்ற

1. ஓ மா சுத்த
கதியுற்ற
கிறிஸ்து ஜென்மித்த நாள் இதே!
மாந்தர் இழந்தார்.
கிறிஸ்தோ பிறந்தார்,
மகிழ், மகிழ் மெய்ச்சபையே!

2. ஓ மா சுத்த
கதியுற்ற
கிறிஸ்து ஜென்மித்த நாள் இதே!
கிறிஸ்துவே மீட்பர்
சாபத்தைத் தீர்ப்பர்
மகிழ், மகிழ், மெய்ச் சபையே.

3. ஓ மா சுத்த
கதியுற்ற
கிறிஸ்து ஜென்மித்த நாள் இதே!
வானவர் பாட
மேய்ப்பர் கொண்டாட
மகிழ், மகிழ், மெய்ச் சபையே.

V.1. J.D.Falk. † 1826
V.2&3 Holzschuher, † 1829