1. ஈசாயின் வேரினின்று,
பிதாக்கள் பூர்வமே
உரைத்தபடி இன்று
இராவிருட்டிலே
ஓர் துளிர் நமக்கு
இதோ, முளைத்தெழும்பி
நன்றாகப் பூத்தது.
2. மிகுந்த மேன்மையுள்ள
இத்துளிரானது
மரியாளின் கற்புள்ள
கர்ப்பத்தில் தங்கிற்று.
பிதா அநாதி நாள்
குறித்த மேசியாவைத்
தேவாவியால் பெற்றாள்
3. இவ்வாச்சரியமான
துளிரின் ஒளியே
உலகிலே உண்டான
இருளை நீக்குமே.
மனிதனாய் இப்போ
பிறந்த தேவப் பிள்ளை
இரட்சகர் அல்லோ.
4. பிதா சுதன் தேவாவி
மா சுவாமிக் கென்றைக்கும்
ரட்சிக்கப்பட்ட பாவி
துதி செலுத்தவும்.
இந்நாள் பிறந்தவர்
பிதாவின் கோபம் ஆற்றி,
ராப் பகளாக்கினார்.
5. நான் இந்த மண்ணை விட்டுப்
பிரிந்து போகச்சே,
சகாயராய் நேரிட்டு
நீர் காரும், இயேசுவே
மோட்சானந்தத்திலே
உம்மைக் கொண்டாடிப் பாட
துணை நீர், கர்த்தரே.
1-2 M.Praetorius, † 1609
3-5 F.Layriz and others