1. ஓ பெத்லகேம் முன்னணை அருகிலே
ஏகோபித்து வாருங்கள், பிள்ளைகளே!
இதோ, இது மைந்தனை நித்த பிதா
ஈவாக அளித்த மா சுத்த இரா!
2. விளக்கு நன்றாகப் பிரகாசிக்கச்சே,
இப்பாலகன் வெள்ளைத் துணிகளிலே
சுற்றுண்டுக் கிடக்கிறார், தூதரிலும்
சிறந்த இப்பிள்ளையைப் பணியவும்.
3. வைக்கோல்மேல் கிடக்கிற பிள்ளையண்டை
மரியாள் யோசேப்பும் களிக்க, அதை
ஊர் மேய்ப்பர் வணங்க, ஆகாயத்திலே
தூதாக்காளின் திரள் துதிக்கிறதே
4. அனைவரும் கைகளைக் கட்டிக்கொண்டே
தாழ்வாய் முழங்கால் படியிட்டிருந்தே
இப்பிள்ளையைத் தொழுங்கள் மேய்ப்பரைப்போல்,
தூதாக்காளின் கூட்டத்தில் துதியுங்கள்.
5. துதிக்கிறோம் நேசிக்கப்பட்டவரே,
நீர் எங்கள் எல்லாரையும் ரட்சிக்கவே
இம்முன்னனையில் மெத்த ஏழை ஆனீர்,
நீர் மரத்தில் மாளவும் மனங்கொண்டீர்.
6. பிள்ளைகளில் அருமையானவரே,
ஈடாக எதைத் தருவோம் உமக்கே?
இவ்வுலகப் பொக்கிஷத்தை விரும்பீர்,
நொறுங்கிய நெஞ்சைச் சிநேகிக்கிறீரா,
7. இதோ, இதயங்களை நல் மனதாய்க்
கொடுப்போம். அவைகளைக் கிருபையாய்
நீர் ஏற்றுக்கொண்டுமது ஐக்கியத்திலே
நற்சுத்தமாய்க் காரும், இரட்சகரே.
Christophvon. Schmid. † 1854.