1. மாட்சிப்போரைப் போரின் ஓய்வைப்
பாடு எந்தன் உள்ளமே;
மாட்சி வெற்றிச் சின்னம்போற்றி
பாடு வெற்றிக் கீதமே;
மாந்தர் மீட்பர் கிறிஸ்து நாதர்
மாண்டுப்பெற்றார் வெற்றியே.
2. காலம் நிறைவேற, வந்தார்
தந்தைவார்த்தைமைந்தனாய்;
ஞாலம் வந்தார் வானம்நீத்தே
கன்னித் தாயார் மைந்தனாக
இருள் நீக்கும் ஜோதியாய்.
3. மூன்று பத்துஆண்டின் ஈற்றில்
விட்டார் வீட்டுச்சேவைக்காய்
தந்தை சித்தம் நிறைவேற்றி
வாழ்ந்தார்;தந்தைசித்தமாய்ச்
சிலுவையில் தம்மை ஈந்தார்
தூய ஏக பலியாய்.
4. வெற்றி கொண்ட சிலுவையே,
இலை மலர் கனியில்
ஒப்புயர்வு அற்றாய் நீயே!
மேலாம் தரு பாரினில்!
மீட்பின் சின்னம் ஆனாய்; மீட்பர்
தொங்கி மாண்டனர் உன்னில்.
5. பிதா சுதன் ஆவியான
தூயராம் த்ரியேகரே,
இன்றும் என்றும் சதாகாலம்
மாட்சி தோத்ரம் எற்பீரே;
மாட்சி தோத்ரம் நித்ய காலம்
உன்னதத்தில் உமக்கே.