327. நற்செய்தி அறிவிக்கும்

1. நற்செய்தி அறிவிக்கும்
தூதாட்கள் பாதங்கள்
மா விரைவே;
ரட்சிக்கும் இச்செய்தி கேளுங்கள்
செத்த விக்கிரகங்களைத்
தள்ளி இயேசு கிறிஸ்துவை
தொழுங்கள், அவர் கர்த்தர்,
சீயோனின் ஆண்டவர்;
ஆம் சேனைகளின் கர்த்தர்,
சீயோனின் ஆண்டவர்.

2. தமது சாவினாலே
நம்மை இரட்சித்தார்.
பராக்கிரமத்தினாலே
பரத்துக் கேரினார்.
இந்தப் பலவானிடம்
வந்தால் மோட்சப் பாக்கியம்.
அவர் சேனையின் கர்த்தர்,
சீயோனின் ஆண்டவர்;
ஆம் சேனைகளின் கர்த்தர்,
சீயோனின் ஆண்டவர்.

3. நானா சாதிகளான
பிதாவின் புத்திரர்
தேவாட்டின் பெரிதான
பந்தியில் சேர்பவர்.
பல பாஷைகளிலே
இந்தப் பாட்டொலிக்குமே;
அவர் சேனையின் கர்த்தர்,
சீயோனின் ஆண்டவர்;
ஆம் சேனைகளின் கர்த்தர்,
சீயோனின் ஆண்டவர்.