1. வயல் உழுது தூவி
நல் விதை விதைப்போம்;
கர்த்தாவின் கரம் அதை
விளையச் செய்யுமாம்;
அந்தந்தக் காலம் ஈவார்
நற்பனி மழையும்,
சீதோஷ்ணம் வெயில் காற்று
அறுப்புவரையும்
நல் ஈவுகள் யாவும்
ஈபவர் கர்த்தரே;
துதிப்போம் என்றும் துதிப்போம்
அவர் மா அன்பையே.
2. விண் வானம் ஆழி பூமி
அவரே சிஷ்டித்தார்;
புஷ்பாதி விண் நட்சத்ரம்
பாங்காய் அமைக்கிறார்;
அடக்கி ஆழி காற்று
உண்பிப்பார், பட்சிகள்
போஷிப்பார், அன்றன்றும்
மைந்தராம் மாந்தர்கள்.
3. நல் ஈவு பலன் பாக்யம்
விதைப்பு அறுப்பை
ஜீவன் சுகம் ஆகாரம்
தரும் பிதா உம்மைத்
துதிப்போம், அன்பாய் ஏற்பீர்
படைக்கும் காணிக்கை;
யாவிலும் மேலாய்க் கேட்கும்
தாழ்மையாம் உள்ளத்தை.