1. என் பிரிய நேசரான
இயேசு எங்கே தங்குவார்,
அவரண்டைச் சேர்வதான
வழியை யார் காட்டுவார்.
பாவங்களின் சேனையாலே
என் மனம் கலங்குது.
இயேசு எங்கே, அவராலே
என் கிலேசம் நீங்குது.
2. கண்ணீரோடெழுந்து நின்று
துக்கப்பட்டுக் கூப்பிட்டேன்;
ஓய்வில்லாமலும் திரிந்து
என் பத்தாவைத் தேடினேன்.
நேசரே, நீர் என்னை விட்டுத்
தூரமாயிராதேயும்;
வாரும், என்னைப் பூரிப்பித்து
ஆற்றித் தேற்றியருளும்.
3. என் வருத்தம் நோவுயாவும்
நெஞ்சின் பாரமும் எல்லாம்
திரள் பாவங்களும் சாவும்
அவரால் நிவிர்த்தியாம்.
ஆகையால் மா வாஞ்சையாக
அவரை அணைக்கவே
நான் ஓயாமல் நித்தமாகத்
தேடிக்கொண்டிருப்பேனே.
4. இயேசுவே, நீர் என்னைவிட்டு
இனி மறையாதிரும்;
ஆ, என் பாவத்தை மன்னித்து,
என்னை உம்மண்டைக் கிழும்.
ஏழையின் களைப்பை ஆற்றி,
என்னைத் தேற்றுவதற்கே
உம்மிடத்திலே காப்பாற்றி,
ரட்சியும், என் நேசரே.