1. நம்பிக்கை விடாமல்,
ஆத்துமமே,
கர்த்தரை ஓயாமல்
பற்றிக் கொள்ளவே
ரட்சிக்கிறார்;
உன்னைக் கைவிடார்;
ராப்போனாப்போல்
துன்பம் போகப் பண்ணுவார்.
தீமையில் காக்க பலத்தவர்
உன்னைப் பாதுகாக்கும்
இரட்சகர்.
2. நம்பிக்கை விடாமல்,
ஆத்துமமே,
கர்த்தரை ஓயாமல்
பற்றிக் கொள்ளவே,
எத்துன்பமும்
உன்னை மூடினும்
கர்த்தரின் பலத்த
கை இரட்சிக்கும்.
நித்திய காலத்துணைவரே!
என்னையும் நீர் காரும்,
மா கர்த்தரே.
Friedrich Raeder † 1822