352. ஊதும், தெய்வாவியை: புத்துயிர்

1. ஊதும், தெய்வாவியை:
புத்துயிர் நிரம்ப;
நாதா, என் வாஞ்சை செய்கையில்
உம்மைப்போல் ஆகிட,

2. ஊதும், தெய்வாவியை:
தூய்மையால் நிரம்ப;
உம்மில் ஒன்றாகி யாவையும்
சகிக்க, செய்திட

3. ஊதும், தெய்வாவியை:
முற்றும் ஆட்கொள்ளுவீர்;
தீதான தேகம் மனத்தில்
வானாக்னி மூட்டுவீர்.

4. ஊதும், தெய்வாவியை:
சாகேன் நான் என்றுமாய்;
என்றென்றும் வாழ்வேன் உம்மோடு
அமர வாழ்வியாய்.

Trentham:SM
Edvin Hatch † 1889