1. நல் மீட்பர் பட்சம் நில்லும்!
ரட்சண்ய வீரரே!
ராஜாவின் கொடியேற்றி
போராட்டம் செய்யுமே!
சேனாதிபதி இயேசு
மாற்றாரை மேற்கொள்ளுவார்;
பின் வெற்றிக் க்ரீடம் சூடி
செங்கோலும் ஓச்சுவார்.
2. நல் மீட்பர் பட்சம் நில்லும்!
எக்காளம் ஊதுங்கால்,
போர்க்கோலத்தோடு சென்று
மெய் விசுவாசத்தால்
அஞ்சாமல் ஆண்மையோடே
போராடி வாருமேன்;
பிசாசின் திரள் சேனை
நீர் வீழ்த்தி வெல்லுமேன்.
3. நல் மீட்பர் பட்சம் நில்லும்!
எவ்வீர சூரமும்
நம்பாமல் திவ்ய சக்தி
பெற்றே ப்ரயோகியும்;
சர்வாயுதத்தை ஈயும்
கர்த்தாவைச் சாருவீர்
எம்மோசமும் பாராமல்
முன் தண்டில் செல்லுவீர்.
4. நல் மீட்பர் பட்சம் நில்லும்!
போராட்டம் ஓயுமே;
வெம்போரின் கோஷ்டம், வெற்றிப்
பாட்டாக மாறுமே!
மேற்கொள்ளும் வீரர் ஜீவ
பொற்கிரீடம் சூடுவார்;
விண் லோக நாதரோடே
வீற்றரசாளுவார்.
George Duffield † 1888.