1. காரிருளில், என் நேச தீபமே,
நடத்துமேன்;
வேறொலியில்லை, வீடும் தூரமே,
நடத்துமேன்;
நீர் தாங்கினால், தூரக் காட்சி ஆசியேன்
ஓர் அடிமட்டும் என் முன் காட்டுமேன்.
2. என் இஷ்டப்படி நடந்தேன், ஐயோ!
முன்னாளிலே;
ஒத்தாசை தேடவில்லை; இப்போதோ
நடத்துமே;
உல்லாசம் நாடினேன், திகிலிகும்
வீம்புகொண்டேன், அன்பாக மன்னியும்.
3. இம்மட்டும் என்னை ஆசீர்வதித்தீர்;
இனிமேலும்
காடாறு சேறு குன்றில் தேவரீர்
நடத்திடும்;
உதய நேரம் வர, களிப்பேன்;
மறைந்துபோன நேசரைக் காண்பேன்.
John Henry Newman † 1890