கர்த்தாவே, உம்முடைய தயவினால் நீர் என் பர்வதத்தைத் திடமாய் நிற்கப்பண்ணியிருந்தீர்; உமது முகத்தை நீர் மறைத்துக்கொண்டபோதோ நான் கலங்கினவனானேன். - சங்கீதம் 30:7

ஆண்டவரே உமது கிருபையும், தயவும் என்னை நிலை நிற்கச்செய்கிறது. என்னை  நம்பிக்கையில் வளரச் செய்கிறது.

நான் என் வாழ்க்கையின் சோதனை காலங்களில் பல நன்மையான காரியங்களை கற்றுக்கொண்டேன்.
இவை அனைத்தும் நீர் எனக்கு கற்றுத் தந்த பாடங்கள். இந்த பாடங்கள் அனைத்தும் எனது வாழ்வில் முக்கியமானவை.

எனது வெற்றிகளுக்காகவோ, ஆசீர்வாதங்களுக்காகவோ நான் பெருமைக் கொள்ளக் கூடாது என நான் கற்றுக் கொண்டேன்.  

எனது வாழ்வில் உள்ள ஒவ்வொரு நன்மைகளுக்கும் நீரே காரணர் என்று கற்றுக் கொண்டேன். நீர் கற்றுத் தந்த பாடங்கள் எனது உள் உணர்வுகளை வலுப்படுத்தி, எனது நம்பிக்கையை பெருகப் பண்ணியிருக்கிறது.  அதற்காக உம்மை துதிக்கிறேன்! உம்மை பணிக்கிறேன்!  

இன்று நீங்கள் ஒரு மலையை நேரிலோ அல்லது படத்திலோ பார்க்கும்போது நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால் அந்த மலையின் உறுதியை போலவும், பிரம்மாண்டத்தை போலவும், கர்த்தர் உங்களை நிலை நிறுத்தியிருக்கிறார் என்றும், அவருடைய கிருபையால் உங்கள் விசுவாசத்தை நிலைநாட்டிருக்கிறார் என்றும் அறியுங்கள். கர்த்தரின் கிருபை என்றுமுள்ளது