கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவரைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள். - சங்கீதம் 30:4

என் ஆண்டவரே, நான் இப்பொழுது மனதாலும், உடலாலும் சோர்ந்து உள்ளேன்.  உம்மை துதித்து பாடும் மனநிலையோ, சக்தியோ எனக்கு இல்லை. என்றாலும், நீர் என் வாழ்வில் செய்துவரும் ஒவ்வொரு செயல்களை நினைக்கும் போது , நீர் துதிக்குப்  பாத்திரர் என்பதை உணருகிறேன்.  

என் சொந்தக் குரலில், நான் உம்மைத்  துதித்து பாடமுடியாமல் போனாலும், மற்றவர்கள் உம்மைத்  துதித்துப் பாடல்களை பாடும்போது, அந்த ஆராதனைகளில் பங்குபெறவோ, தொலைக்காட்சி, வானொலி போன்ற தொழில்நுட்ப உதவியுடன், உமது துதி பாடல்களை ஒலிக்கச் செய்து, எனது ஆத்துமா அந்த பாடல்களோடு இசைந்து, உம்மை துதிக்கவும், உம்மை மகிமை படுத்ததும் நினைவைத்  தாரும். ஒவ்வொரு நாளும் நான் உமது புகழைப் பாட எனக்கு வாய்ப்பைத்  தாரும். என் வாழ்நாளின் ஒவ்வொரு நொடிப்பொழுதும் உம்முடைய நாமத்தை உண்மையோடு மகிமை படுத்த கற்றுத்தாரும்.

நமது துதிப் பாடல்கள் வானசேனைகளைப் போல் ஒலிக்காமல் இருக்கலாம். நமது குரல் வளத்ததையோ இசை ஞானத்தையோ கடவுள் மதிப்பீடு செய்வதில்லை. நமது உள்ளத்தில் இருந்து எழும் இசையையும், எண்ணத்தையும், அதன் நோக்கத்தையுமே காண்கிறார்.