கர்த்தாவே, சிறுமைப்பட்டவர்களுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்; அவர்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவீர்.

மண்ணான மனுஷன் இனிப் பலவந்தஞ்செய்யத் தொடராதபடிக்கு, தேவரீர் திக்கற்ற பிள்ளைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதிசெய்ய உம்முடைய செவிகளைச் சாய்த்துக்கேட்டருளுவீர். - சங்கீதம் 10:17-18

எங்கள் பரலோகத் தகப்பனே, உம்மை நான் பற்றிக்கொண்டதால் எனக்கு கிடைத்த நன்மைகள் அதிகம். குழப்பமும் நிலையற்றதுமான இந்த உலகில் மன அமைதியுடனும், மன உறுதியுடனும் என்னால் வாழ முடிகிறது. இந்த வீழ்ந்து போன உலகில் நிறைந்திருக்கும் தீமைகளால் நான் பாதிக்கப் பட்ட போதெல்லாம், நீர் என்னைக் காத்து என்னை தீமைக்குத் தப்புவித்தீர். இந்த பாவ உலகின் தீமைகள் ஒருபோதும் என்னை  சோர்வடையவோ, அழிக்கவோ, மேற்கொள்ளவோ அனுமதிக்காமல் நீர் என்னை காத்துக் கொண்டீர்.

நமது பரமத் தகப்பனிடம் நமது தேவைகளையோ, உதவிகளையோ கேட்க ஒருபோதும் தயங்கத் தேவையில்லை. நமது அமைதியான வாழ்க்கையில் நமது துதிகளையும், நன்றிகளையும் எப்படி ஏற்றுக் கொள்ளுகிறாரோ , அதேபோல் நமது ஆபத்து காலங்களிலும் அவர் நமது விண்ணப்பங்களைக் கேட்கிறவாராகவும் பதிலளிக்கிறவராகவும் இருக்கிறார்.