நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; செம்மையான இருதயமுள்ளவர்களே, நீங்கள் எல்லாரும் ஆனந்த முழக்கமிடுங்கள். - சங்கீதம் 32:11

எங்கள் பரமதகப்பனே இவ்வுலகில் இனத்தாலும், கலாச்சாரத்தாலும், மொழியாலும்  பிரிந்து கிடக்கும் நாங்கள்,  உம்மை வெவ்வேறு வழிகளில் தொழுதுகொள்ளுகிறோம். எங்கள் வழிபாட்டு முறைகள் எவ்விதமாய் இருப்பினும், நாங்கள் ஆவியிலும், உண்மையிலும் உம்மை தொழுதுகொள்ள வேண்டும் என்று சங்கீதக்காரனுடைய இந்த  வார்த்தைகள் மூலமாக நீர் எங்களுக்கு உணர்த்துவதற்காக
 நன்றி!  

இந்த அழைப்பின் மூலமாக நாங்கள் மனமகிழ்ச்சியுடன் ஆனந்த சத்தமிட்டு உம்மை துதிப்பதை நீர் விரும்புகிறீர் என்று அறிகிறோம். இந்நாள் முதல் நான் உம்மை ஆனந்த சத்தமிட்டு உம்மை துதிப்பேன். எனது உள்ளத்தை உமது மகிழ்ச்சியால் நிறப்பும்படி உம்மை வேண்டிக்கொள்கிறேன்.  

விசுவாசிகளை சோகங்களும், வேதனைகளும் நிறைந்த வாழ்க்கை வாழ்வதாக ஊடகங்கள் சித்தரிக்கின்றன. ஆனால் அதற்கு மாறாக  அன்றாடக  வாழ்க்கையில், விசுவாசிகளே இந்த உலகில் மற்றவர்களுக்காக சேவை செய்வதின் மூலமாகவும், மற்றவர்களை மகிழ்விப்பதின் மூலமாகவும் அதிக மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கிறார்கள்.